• அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி - ரூ.102 கோடி செலவினம்
· அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் ஸ்டார்ஸ் திட்டத்துக்கு ரூ .102 கோடி செலவினம் - 1147 மாணவர்கள் பலன் அடைந்துள்ளனர். - விஐடி வேந்தர் கோ . விசுவநாதன் தகவல் வேலூர் , தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் ஸ்டார்ஸ் திட்டத்துக்கு ரூ .102 கோடி வரை செலவழிக்கப்பட்டுள்ளது என விஐடி வேந்தர் கோ . விசுவநாதன் தெரிவித்தார் . அரசு மேல்நிலை பள்ளிகளில் படித்து , அதிக மதிப்பெண் பெற்று பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ , மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்கும் ஸ்டார்ஸ் திட்டத்தின் , ஸ்டார்ஸ் தினம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது . விஐடி வேந்தர் கோ . விசுவநாதன் தலைமை வகித்து பேசியதாவது : கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்கும் வகையில் கடந்த 2008- ல் தொடங்கப்பட்ட ஸ்டார்ஸ் திட்டத்தில் இது வரை மொத்தம் 1147 ம...