Posts

• இராணிப்பேட்டை சிங்கப்பெண் படையால் பள்ளியில் சேர்ந்த குழந்தைகள்.

Image
·          இராணிப்பேட்டை மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை முயற்சியால் பள்ளியில்   சேர்ந்த 15 குழந்தைகள் .      இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரையின்பேரில் , திமிரி , சக்தி நகர் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் ரேணுகாதேவி தலைமையிலான சிங்கப்பெண் அதிரடி படையினர் பழங்குடியினர் மக்களிடையே குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர் .       அந்நிகழ்ச்சியின்போது பள்ளிக்கு செல்லாமல் இருந்த 15 குழந்தைகள் கண்டறியப்பட்டனர் . இதனை தொடர்ந்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (DCPU) இணைந்து குழந்தைகளின் பெற்றோர்களை நேரில் சந்தித்து ஆலோசனை வழங்கி , பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர் .        அதன் பலனாக பள்ளிக்கு செல்லாமல் இருந்த அனைத்து 15 குழந்தைகளும்   பள்ளியில் சேர்க்கப்பட்டனர் . இந்த சிறப்பான முயற்சியை இர...

• விவசாயிகள் நூதன போராட்டம்.

Image
 ·          விவசாயிகள் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் வாயில் கருப்பு துணி கட்டி காதில் பூ வைத்து விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் நூதன போராட்டம். ·          விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காக பல புகார்களை சொன்னால் அதிகாரிகள் அலட்சியமாக செல்போனில் வாட்ஸ்ஆப், முகநூல் , திரைப்படங்களை பார்த்து பொழுதை போக்குகின்றனர் பெயரவுக்கு கூட்டம் என விவசாயிகள் வேதனை பேட்டி .              வேலூர் மாவட்டம் , வேலூரில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் தலைமையில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசு துறை அதிகாரிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.     விவசாயிகள் பயிர் கடன் தமிழக அரசு சிறு குறு விவசாயிகள் என விவசாயிகளிடையே பிரிவினை உருவாக்கி தள்ளுபடி செய்கிறது. விவசாயிகள் முழுமையாக கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எ...

• நீரின் மூலம் மின்சாரம் திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு.

Image
  ·          அணைக்கட்டு அருகே அதானியின் நீரேற்று திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது . ·          வேலூர் திருப்பத்தூர் , திருவண்ணாமலை , ராணிப்பேட்டை , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் - தடுத்து நிறுத்த விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை   ·          நீரின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ரூ . 10 ஆயிரம் கோடி திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு.      வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட கிழக்குத் தொடர்ச்சி   ஜவ்வாது மலை பகுதியில் உள்ள   அல்லேரி மலையில் நீரேற்று மின் நிலையம் அமைக்க அதானி நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஒன்றிய சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவிடம் 15.06.2026 அன்று அதானி குழுமத்திற்கு சொந்தமான அதானி ஹைட்ரோ போர்டின் லிமிடெட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது .            இ...