• இராணிப்பேட்டை சிங்கப்பெண் படையால் பள்ளியில் சேர்ந்த குழந்தைகள்.
· இராணிப்பேட்டை மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை முயற்சியால் பள்ளியில் சேர்ந்த 15 குழந்தைகள்.
இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரையின்பேரில், திமிரி, சக்தி நகர் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் ரேணுகாதேவி தலைமையிலான சிங்கப்பெண் அதிரடி படையினர் பழங்குடியினர் மக்களிடையே குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
அந்நிகழ்ச்சியின்போது பள்ளிக்கு செல்லாமல் இருந்த 15 குழந்தைகள் கண்டறியப்பட்டனர். இதனை தொடர்ந்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (DCPU) இணைந்து குழந்தைகளின் பெற்றோர்களை நேரில் சந்தித்து ஆலோசனை வழங்கி, பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதன் பலனாக பள்ளிக்கு செல்லாமல் இருந்த அனைத்து 15 குழந்தைகளும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இந்த சிறப்பான முயற்சியை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி, குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் இதுபோன்ற மக்கள் நலப் பணிகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளுமாறு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு அறிவுறுத்தினார்.

Comments
Post a Comment