• விவசாயிகள் நூதன போராட்டம்.


 ·         விவசாயிகள் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் வாயில் கருப்பு துணி கட்டி காதில் பூ வைத்து விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் நூதன போராட்டம்.

·         விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காக பல புகார்களை சொன்னால் அதிகாரிகள் அலட்சியமாக செல்போனில் வாட்ஸ்ஆப், முகநூல், திரைப்படங்களை பார்த்து பொழுதை போக்குகின்றனர் பெயரவுக்கு கூட்டம் என விவசாயிகள் வேதனை பேட்டி.

            வேலூர் மாவட்டம், வேலூரில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் தலைமையில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசு துறை அதிகாரிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

    விவசாயிகள் பயிர் கடன் தமிழக அரசு சிறு குறு விவசாயிகள் என விவசாயிகளிடையே பிரிவினை உருவாக்கி தள்ளுபடி செய்கிறது. விவசாயிகள் முழுமையாக கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் காதில் பூ வைத்தும், வாயில் கருப்பு துணி கட்டியும் நூதனமான முறையில் விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

   விவசாயிகள் ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் உள்ளோம். இவர்கள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை என்றால் தமிழக அரசு விவசாயிகளை கருணை கொலை செய்ய வேண்டுமென அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவுள்ளோம். மாநிலம் முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது தடுக்கப்பட வேண்டும். எங்களை எந்த அரசியல் கட்சியும் போராட்டத்திற்கு தூண்டவில்லை. நாங்கள் எல்லா ஆட்சியிலும் போராட்டம் செய்துள்ளோம்.

           கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் விவசாயிகளின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்க வேண்டிய அரசு அதிகாரிகள் தங்களுடைய செல்போனில் வாட்ஸ்ஆப், முகநூல், திரைப்படங்களை பார்த்து பொழுதை கழித்தனர். இது வேதனை அளிக்கும் செயலாகும் என பேசினார்.

 

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.