• கட்டுமான பொருட்கள் விலை உயர்வை குறைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
· கட்டுமான பொருட்களின் விலை உயர்வை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் . · மாட்டு வண்டிகளில் மணல் எடுத்து கட்டுமானங்கள் கட்ட அனுமதிக்க வேண்டும் . மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். - புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமானதொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் வேல்முருகன் பேட்டி. வேலூர் மாவட்டம் , வேலூர் காட்பாடியில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான கூட்டம் மற்றும் சிறப்பு முகாம் புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில அமைப்பு செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் திரளான கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சிறப்பு முகாமானது நடைபெற்றது. இதில் தொழிலாளர்களுக்கு இலவசமாக வேட்டி சேலையும் வழங்கப்பட்டது. மேலும் அமைப்புசாரா மற்றும் கட்டுமான நலவாரியங்களில் உறுப்பினர்களாக சேருவதற்...