• நாடு முழுவதும் கூட்டுறவு நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளது.
· நாடு முழுவதும் கூட்டுறவு நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளது.
· பாராளுமன்றம் மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை இணைஅமைச்சர் எல்.முருகன் காட்பாடியில் பேச்சு.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் தனியார் திருமண மண்டபத்தில் தேசிய கூட்டுறவு ஆண்டு விழா சௌத் இந்தியன் மல்டி ஸ்டேட் அக்ரி கல்சுரல் சோசைட்டியின் நிறுவனர் கிருஷ்ணன் தலைமையில் விழா நடைபெற்றது.
இதில் மத்திய பாராளுமன்றம் மற்றும் தகவல் ஒளிப்பரப்பு துறை இணைஅமைச்சர் எல்.முருகன் குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தார். இதில் அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு, பாஜக மாவட்ட தலைவர் தசரதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் திரளான விவசாயிகளும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் சித்த மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணையை மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் வழங்கினார்.
பின்னர் விழாவில் மத்திய பாராளுமன்றம் மற்றும் தகவல் ஒளிப்பரப்பு துறை இணைஅமைச்சர் எல்.முருகன் பேசுகையில்,
சுதந்திரத்திற்கு பிறகு கூட்டுறவு துறை வேளாண் துறையில் இருந்தது. மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் கூட்டுறவுக்கு தனி அமைச்சர் தனி துறையை நியமித்தார். அதில் அமித்ஷாவை அமைச்சராக்கினார் .
மீன் வளம், பால்வள துறை, வேளாண் துறையில் கூட்டுறவு துறையின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. அதற்கு உதாரணம் குஜராத்தில் உள்ள அமூல் கூட்டுறவு சோசைட்டிதான். அதனுடைய லாபம் அனைத்தும் உறுப்பினர்களுக்கும் விவசாயிகளுக்கும் சென்று சேரும். அமுல் நிறுவனம் பாலில் வெண்மை புரட்சி செய்து உலகளவில் கார்பரேட் நிறுவனங்களுக்கு இணையாக வளர்ந்து பல லட்சம் உறுப்பினர்கள் பயன் பெற்று வருகின்றனர். அதேபோல் சிம்கோவும் மாற வேண்டும்.
ஜமுனாமரத்தூரில் ஆயுஷ் மருத்துவமனை துவங்கியுள்ளனர். நம் நாட்டு கலை யோகா நம் நாட்டு தமிழ்நாட்டில் தோன்றிய சித்த மருத்துவம் யுனனி மக்கள் மத்தியில் உலகம் முழுவதும் சென்றடைகிறது. முதன்மை வேளாண் கூட்டுறவு சங்கங்கள் எல்லாவற்றையும் இந்தியா முழுவதும் டிஜிட்டல் மயமாக்கும் பணியை பிரதமர் மோடி செய்துள்ளார்.
தகவல் பரிமாற்றத்திற்காக டிஜிட்டல் புரட்சியில் இந்தியா சாதனை படைத்துள்ளது எல்லாருக்கும் தெரியும். டிஜிட்டல் மணி டிரான்சக்ஷன் கிராமத்திலும் நடக்கிறது. சத்தியமங்கலத்தில் ஒரு காட்டில் பகுதியில் வெள்ளரிக்காய் வாங்கிவிட்டு பணத்தை ஜி-பேயில் அனுப்ப சொன்னார்கள். எந்த அளவில் டிஜிட்டல் பண பரிமாற்றம் சென்றடைந்துள்ளது என்பதற்கு உதராணம்.
நேரடியாக 11 கோடி விவசாயிகள் வருடத்திற்கு 6 ஆயிரம் எந்த இடை தரகரும் இல்லாமல் அவர்களின் வங்கி கணக்கிற்கு செல்கிறது. நீங்கள் விவசாயி என்பதற்கு அத்தாட்சி இருந்தால் உங்கள் வங்கி கணக்கிலேயே நேரடியாக பணம் வரும் சொட்டு நீர் பாசன மாணியம் உள்ளிட்டவை நேரடியாக உங்கள் வங்கி கணக்கில் வருகிறது. அப்போதைய பிரதமர் ராஜுவ்காந்தி சொன்னார். விவசாயிகளுக்கு பணம் வழங்கினார். இடைதரகர்கள் பயனடைகிறார்கள் என ஆனால் மோடி ஆட்சியில் விவசாயிகள் முழுவதும் நேரடியாக பயனடைகின்றனர். முதுகு எலும்பு விவசாயம்தான். விவசாயம் தழைத்தோங்க நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என பேசினார்.

Comments
Post a Comment