• கட்டுமான பொருட்கள் விலை உயர்வை குறைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

·         கட்டுமான பொருட்களின் விலை உயர்வை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

·         மாட்டு வண்டிகளில் மணல் எடுத்து கட்டுமானங்கள் கட்ட அனுமதிக்க வேண்டும். மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்.

- புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமானதொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் வேல்முருகன் பேட்டி.

     வேலூர் மாவட்டம், வேலூர் காட்பாடியில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான கூட்டம் மற்றும் சிறப்பு முகாம்  புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில அமைப்பு செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் திரளான கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சிறப்பு முகாமானது நடைபெற்றது. இதில் தொழிலாளர்களுக்கு இலவசமாக வேட்டி சேலையும் வழங்கப்பட்டது. மேலும் அமைப்புசாரா மற்றும் கட்டுமான நலவாரியங்களில் உறுப்பினர்களாக சேருவதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

         பின்னர் மாநில தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    கட்டுமான மற்றும் அமைப்புசாரா  தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். மேலும் கட்டுமான பொருட்களான மணல், ஜல்லி தட்டுப்பாடு உள்ளது. கட்டுமானத்திற்கு தேவையான மணல் கிடைப்பதில்லை. விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும். மணல் எளிதில் கட்டுமான தொழிலுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

     ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் கல்வி உதவி தொகையில் பாகுபாடு காட்டாமல் அதனை சரிசமமாக அரசு வழங்க வேண்டும். அதே போல் எந்த வயதில் இறந்தாலும் கட்டுமான தொழிலாளர்களுக்கு இயற்கை மரண உதவிதொகை அரசு வழங்க வேண்டும்.

     மேலும் மணல் கொள்ளையை தடுக்கும் வகையில் கிராம ஊராட்சி மூலம் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும். அதுவும் மாட்டு வண்டிகளில் மட்டும் மணல் கொண்டு சென்று கட்டுமான தொழிலுக்கு பயன்படுத்த அனுமதித்தால் மணல் கொள்ளையை அரசு தடுக்க முடியும். அந்த வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினார்.


Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.