• மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்.
வேலூர் மாவட்டத்தில் டிசம்பர் 3, 2026 உலக மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்று திறனாளிகளுக்கு மா வ ட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 16.10.2026 அன்று நடை பெறவுள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் 3- ஆம் நாள் உலக மாற்று திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது . அவ்வகையில், டிசம்பர் 3, 2026 உலக மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்று திறனாளிகளுக்கு மா வ ட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் 16.10.2026 அன்று காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடை பெறவுள்ளது. உலக மாற்றுத் திறனாளிகள் தினம் – 2026 மா வட்ட அளவிலான மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பட்டியல் அ ) செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான போட்டிகள் :- வயது வரம்பு போட்டி விவரம் 12 வயது முதல் 14 வயது வரை :- ஆண்கள் , பெண்கள் ஓ...