Posts

Showing posts from October, 2023

• சுதந்திர போராட்ட தியாகிகள், வாரிசுதாரர்களுக்கான குறை தீர்வு நாள் கூட்டம்

Image
·          சுதந்திர போராட்ட தியாகிகள், வாரிசுதாரர்களுக்கான குறை தீர்வு நாள் கூட்டம்         வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேலூர் மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவரது வாரிசுதாரர்களுக்கான குறை தீர்வு நாள் கூட்டம் ஆட்சியர் பெ . குமாரவேல்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.         இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த . மாலதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தனஞ்செயன், முன்னோடி வங்கி மேலாளர் ஜமாலுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.    

வேலூர் வரலாற்று சுவடுகள் என்ற தலைப்பில் கதைகள் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி.

Image
·         நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலூர் வரலாற்று சுவடுகள் என்ற தலைப்பில் கதைகளை சொல்லி வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரைக்கும்   திறன் மேம்பாட்டு   நிகழ்ச்சி                 நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலூர் முத்துரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலூர் வரலாற்று சுவடுகள் என்ற தலைப்பில் கதைகளை சொல்லி வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரைக்கும்   திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.                 தமிழ்நாட்டு மாணவர் ஒருவர் உலகின் எந்த நாட்டு மாணவரைவிட தரமும் , தகுதியும் குறைந்தவர் கிடையாது என்பதை எடுத்துரைக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நான் முதல்வன் திட்டத்தை தொடங்கினார்கள். குறிப்பாக 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள் , அவை தொடர்பான வேலைவாய்ப்பு...

• வேலூரில் தேசிய ஒற்றுமை நாள் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Image
  ·          வேலூரில் தேசிய ஒற்றுமை நாள் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.         வேலூர், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் முன்னிட்டு தேசிய ஒற்றுமை நாள் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது .         மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த . மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் க . ஆர்த்தி உட்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர் .  

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

Image
  வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்.                 வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.             இக்கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் கட்டாய கடமைகளான கிராம சாலைகள் , பாலங்கள் , தரைப்பாலங்களை   பழுதுபார்த்தல் , குடியிருப்பு பகுதிகளில் தெரு விளக்குகள் அமைத்தல் , கழிவு நீர் கால்வாய் அமைத்து கழிவு நீரை அகற்றுதல் , தெருக்களை சுத்தம் செய்தல் , திடக்கழிவு மேலாண்மை பணிகள் , பொது கழிப்பிட வசதி ஆகிய பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.             மேலும் கிராம ஊராட்சிகளின் விருப்புரிமை பணிகளான மரங்களை நட்டு பாதுகாத்தல் , குடியிருப்பு இல்லாத பொது இடங்களில் தெரு விளக்குகள் அமைத்தல் , சந்தைகளை ஏற்படுத்தி பராம...

• வேலூரில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி.

Image
  ·          வேலூரில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி.         வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது . இந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர் .    

• இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் "தேசிய ஒற்றுமை நாள்" உறுதிமொழி ஏற்பு.

Image
      இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விஸ்வேஸ்வரய்யா ( தலைமையிடம் ) மற்றும் குமார் ( இணையவழி குற்றப்பிரிவு ) ஆகியோர் தலைமையில் , " தேசிய ஒற்றுமை நாள் " உறுதிமொழி ஏற்கப்பட்டது .    இவ்வுறுதிமொழியில் , " இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன் .       சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும் நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன்.       எனது நாட்டின் உள்பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன் " என ‌ உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது .                 இவ்வுறுதிமொழி ஏற்ப...