ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

 வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்.

                வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

            இக்கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் கட்டாய கடமைகளான கிராம சாலைகள், பாலங்கள், தரைப்பாலங்களை  பழுதுபார்த்தல், குடியிருப்பு பகுதிகளில் தெரு விளக்குகள் அமைத்தல், கழிவு நீர் கால்வாய் அமைத்து கழிவு நீரை அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், திடக்கழிவு மேலாண்மை பணிகள், பொது கழிப்பிட வசதி ஆகிய பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

            மேலும் கிராம ஊராட்சிகளின் விருப்புரிமை பணிகளான மரங்களை நட்டு பாதுகாத்தல், குடியிருப்பு இல்லாத பொது இடங்களில் தெரு விளக்குகள் அமைத்தல், சந்தைகளை ஏற்படுத்தி பராமரித்தல், விழாக்கள் மற்றும் பொருட்காட்சிகளை நெறிப்படுத்துதல், விளையாட்டு திடல்கள், பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. உள்ளாட்சி தினமான 01.11. 2023 அன்று கிராம சபை கூட்டம் நடத்துவது தொடர்பாகவும், கிராம சபை கூட்டங்களில் விவாதிக்கப்பட வேண்டிய கூட்டப் பொருட்கள் குறித்தும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

            தேசிய ஊராட்சி விருது 2024 ஆம் ஆண்டிற்கு இணையதள தரவுகள் மூலம் விண்ணப்பிக்கவும், விவரங்களை பதிவேற்றம் செய்யவும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இணைய வழி மூலம் வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, வரி அல்லாத வரி, வர்த்தக உரிமம் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.கிராம ஊராட்சிகளில்  தனியார் ஆக்கிரமிப்பில் இருக்கும் ஊராட்சி சொத்துக்களை  கண்காணித்து  ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

                இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி,  உதவி இயக்குநர் ஊராட்சிகள் (பொ) சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.