• வேலூரில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்பாட்டம்.
· வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்பாட்டம். வேலூர் மாவட்டம் , வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் கூட்டமைப்பின் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினை தமிழ்நாடு அமைப்புசாரா ஆட்டோ தொழிலாளர் நலவாரியத்தின் உறுப்பினர் ஆர்.டி . பழனி துவங்கி வைத்தார். தற்போது கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கி வரும் ஓய்வூதியம் ரூ .1200-5000/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு பெற்றவர்கள் 60 வயதிற்கு மேல் இருந்தாலும் இயற்கை மரண உதவி தொகையை அவர்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும். நலவாரியத்திற்கு என தனி வங்கியை துவங்கி அதன் மூலம் பண...