• JCI வெற்றி வீரன் மண்டல மாநாடு.

·         JCI வெற்றி வீரன் மண்டல மாநாடு - ஆற்காடு மகாலட்சுமி நர்சிங் கல்லூரி மாணவியர் முதலிடம்.

·         ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை சேர்மன் Rtn.PHF.பாலாஜி லோகநாதன் வாழ்த்து.

         JCI மண்டலம் 16 சார்பில் 50 கிளை கொண்ட இயக்கம் செயல்பட்டு வருகிறது. அதில் ஆற்காடு மகாலட்சுமி நர்சிங் கல்லூரி இளைய ஜேசிக்களும் உள்ளனர். இதில் ஆற்காடு மகாலட்சுமி நர்சிங் கல்லூரி மாணவியர்கள் சிறப்பாக செயல்பட்டமையை பாராட்டி காட்பாடி குடியாத்தம் சாலையில் உள்ள துர்கா மகாலில் நடைபெற்ற வெற்றி வீரன் மண்டல மாநாட்டில் JCI Zone 16 மண்டல தலைவர் JFM.ஏழுமலை, ஆற்காடு மகாலட்சுமி நர்சிங் கல்லூரி இளைய JCI மாணவிகளுக்கு முதலிடம் கோப்பையை வழங்கினார்.

           ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை சேர்மன் Rtn.PHF.பாலாஜி லோகநாதன் மகாலட்சுமி நர்சிங் கல்லூரி இளைய ஜேசிக்களை நர்சிங் சேவை செய்வது மட்டுமல்லாமல் JCI சார்பிலும் சிறந்த இளைய ஜேசிக்களாக முதலிடம் பிடித்தமைக்கு பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். உடன் ஆற்காடு கிச்சிலி கிளை இயக்க தலைவர் Jc.M.ஏழுமலை, லட்சுமி மெடிக்கல்  Jc.ஞானமூர்த்தி, Jc. ஜெகன்,  Jc.ஜெயப்பிரகாஷ், Jc.சரவணன், நர்சிங் கல்லூரி முதல்வர் சிவசக்தி, துணைமுதல்வர் ஞானதீபா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

          இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை செயலாளர் சாந்திபாலாஜி, தாளாளர் கோமதிபாலாஜி, இணைசெயலாளர் செல்வி பா.வைஷ்ணவி ஆகியோர் செய்திருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.