• ஃபெஞ்சல் புயலின் காரணமாக பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம்
· ஃபெஞ்சல் புயலின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் வருகின்ற 30.11.2024 சனிக்கிழமை அன்று நடைபெற இருந்த தீவிர தூய்மை பணி மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணி தற்காலிமாக ஒத்திவைக்கப்படுகிறது. · புயல் கரையை கடக்கும்போது வேலூர் மாவட்டத்தில் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இந்திய வானிலை ஆய்வுத் துறை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் 29.11.2024 ஆம் நாள், மாலை 4.15 நேரமிட்ட அறிக்கையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று 29.11.2024 மதியம் 2.30 மணி அளவில் அதே பகுதிகளில் ”ஃபெஞ்சல்” புயலாக வலுப்பெற்று, நாகப்பட்டினத்திலிருந்து சுமார் கிழக்கே 260 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 270 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 300 கி...