• ஃபெஞ்சல் புயலின் காரணமாக பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம்

·        ஃபெஞ்சல் புயலின் காரணமாக  வேலூர் மாவட்டத்தில் வருகின்ற 30.11.2024 சனிக்கிழமை அன்று நடைபெற இருந்த தீவிர தூய்மை பணி மற்றும்  டெங்கு  கொசு ஒழிப்பு பணி தற்காலிமாக ஒத்திவைக்கப்படுகிறது.

·        புயல் கரையை கடக்கும்போது வேலூர் மாவட்டத்தில்  தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள்  தேவையின்றி வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்திய வானிலை ஆய்வுத் துறை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் 29.11.2024 ஆம் நாள், மாலை 4.15 நேரமிட்ட அறிக்கையில்  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று 29.11.2024 மதியம் 2.30 மணி அளவில் அதே பகுதிகளில் ”ஃபெஞ்சல்” புயலாக வலுப்பெற்று, நாகப்பட்டினத்திலிருந்து சுமார் கிழக்கே 260 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 270 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 300 கிழக்கே தொலைவிலும் நிலைக்கொண்டுள்ளது.  இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக- புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும், மகாபலிபுரத்திற்கும் இடையே புதுவைக்கு அருகே 30.11.2024 அன்று மதியம் புயலாக கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் இவ்வறிக்கையில் வேலூர் மாவட்டத்தில் 30.11.2024 அன்று ஒரீரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும், தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும்,  இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே  மழை, புயலினால் ஏற்படும் பலத்த தரைக்காற்று ஆகிய காரணங்களின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில்  நாளை 30.11.2024 சனிக்கிழமை அன்று அனைத்து உள்ளாட்சிகளிலும் நடைபெறுவதாக இருந்த தீவிர தூய்மை பணி மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. தீவிர தூய்மை பணி நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும் 30.11.2024 அன்று மதியம் புயல் கரையை கடக்கும் நேரத்தில் வேலூர் மாவட்டத்தில்  தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில்  வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தெரிவித்துள்ளார். 

 

               

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.