• ஒடுகத்தூர் ஆக்ஸ்போர்ட் பள்ளியில் இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி.
· ஒடுகத்தூர் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் பள்ளியில் இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் குறித்த உறுதிமொழி ஏற்பு.
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் பள்ளியில் இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் குறித்த, இந்திய அரசியல் அமைப்பு முகப்புரையின் சாராம்சத்தையும் மாணவர்களுக்கு உறுதிமொழி ஏற்க வழிவகை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஆக்ஸ்போர்ட் பள்ளியின் தாளாளர் அருண் தலைமை ஏற்றார். தலைமை ஆசிரியர் தீபாஅருண் முன்னிலை வகித்தார். அரசியல் சட்டத்தின் முகப்புரையின் சாராம்சத்தையும் மாணவர்களுக்கு விளக்கமாக விளக்கமளித்து உறுதிமொழி ஏற்க செய்தார், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட துணைத்தலைவர், கருத்துரையாளர் மற்றும் பள்ளியின் ஆலோசகர் கே.விஸ்வநாதன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார் .
இறுதியில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பள்ளி வளர்ச்சிக்கு எப்படி தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்ற முறையில் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவடைந்தது. பள்ளி மாணவி நன்றி உரை கூறினார்.
Comments
Post a Comment