Posts

Showing posts from January, 2025

• ஆற்காடு மகாலட்சுமி குளோபல் பள்ளியில் குழந்தைகள் அறிவியல் மாநாடு.

Image
·          ஆற்காடு மகாலட்சுமி குளோபல் பள்ளியில் தமிழ்நாடு அருகில் இயக்கம் சார்பில் குழந்தைகள் அறிவியல் மாநாடு.    

• அரசு மதுபானகடை பணியாளர் ஆயத்த மாநாடு.

Image
  ·          அரசு மதுபானகடை பணியாளர் காலவரையற்ற காத்திருப்பு போராட்ட வேலூர் , ராணிப்பேட்டை , திருப்பத்தூர் மூன்று மாவட்ட ஆயத்த மாநாடு .     ·          டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் பெரியசாமி வேலூரில் பேட்டி        வேலூர் மாவட்டம் , வேலூர் ஆசிரியர் இல்லத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் ஏ . ஐடியுசி , தொழிற்சங்கத்தின் சார்பில் வேலூர் , ராணிப்பேட்டை , திருப்பத்தூர் மூன்று மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு ஆயத்த மாநாடு கூட்டம் ஒருங்கிணைந்த தலைவர் திருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.       இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லதா , டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் ரமேஷ் , மாநில பொருளாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் திரளான டாஸ்மாக் பணியாளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.                பின்னர் செய்திய...

• ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சோமவார பிரதோஷம்.

Image
·          ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சோமவார பிரதோஷம் – நந்தி பகவானுக்கு பால் , தயிர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்.       வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால் , தயிர் , தேன் , பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வில்வ இலைகள், அருகம்புல், மலர் மாலைகள் ஆகியவைகளை கொண்டு சிறப்பு அலங்காரங்களை செய்து மகா தீபாராதனைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மேளதாளங்கள் முழங்க சாமி உட்பிரகார உலாவும் வந்தது . பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.  

• இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர்களின் தகவல் சேகரித்தல்.

        இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கிளை உறுப்பினர்களின் தகவல் சேகரித்தல் .                  இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கிளையின் அனைத்து உறுப்பினர்களின் தகவல்கள் சேகரிக்கும் பொருட்டு மொத்தம் உள்ள 619 உறுப்பினர்களின் பெயர் , விலாசம் , உறுப்பினர் எண் தொலைபேசி எண் , மின்னஞ்சல் முகவரி மற்றும் உறுப்பினராக சேர்ந்த தேதி ஆகியவற்றை MS-Excel படிவத்தில் சமர்ப்பிக்க இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை சேர்மென் தலைமையில் 30.09.2024 அன்று காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது . இதன் அடிப்படையில் மாவட்ட கிளையிலிருந்து உறுப்பினர்களின் விபரம் பெயர் , விலாசம் , ஆதார் எண் , கைப்பேசி எண் , உறுப்பினர் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை வரப்பெறவில்லை என்று தெரிவித்தனர் . மேற்படி பொருள் குறித்து அனைத்து உறுப்பினர்களுக்கும் தபால் அனுப்பி நாளொன்றுக்கு தலா 50 உறு...

• தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு.

·         தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு.                                தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், வேலூர் வீட்டு வசதி பிரிவில் காட்பாடி தாலுக்கா தாரப்படவேடு திட்டப்பகுதியில் மீதமுள்ள 9 உயர் வருவாய் பிரிவு வீடுகள், வேலூர் புறநகர் திட்டப்பகுதி-5 ல் மீதமுள்ள 22 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் காஞ்சிபுரம் திட்டப்பகுதியில் மீதமுள்ள 36 மத்திய வருவாய் பிரிவு வீடுகள் யாவும் உள்ள நிலையில் மொத்த கொள்முதல் திட்டத்தின்கீழ் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் விண்ணப்பம் செய்து பயன்பெற கேட்டு கொள்ளப்படுகிறது.                    கூடுதல் விவரங்களுக்கு கீழ்க்கண்ட இணைய தள முகவரியில் காணலாம் https://tnhb.tn.gov.in/n...

• 15-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி.

Image
15-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ , மாணவிகளை பாராட்டி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசுகளை வழங்கினார். ஜனவரி 25, 15-வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாட்டம்   மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர்   அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது                 இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுகொள்ளப்பட்டது . தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மூத்த வாக்காளர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பித்தார்.                   பின்னர் வேலூர் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு   கல்லூரி , பள்ளி மாணவ , மாணவிகளுக்கிடையே நடைபெற்ற வாக்...