• வேலூரில் ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு தொழுகை.

· வேலூரில் ரம்ஜானை முன்னிட்டு ஆர் . என் . பாளையத்தில் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை - 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பு . வேலூர் மாவட்டம் , வேலூர் ஆர் . என் . பாளையத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினார்கள். ஈகை திருநாளான ரம்ஜானை முன்னிட்டு நோன்பிருந்து ஒருவரை ஒருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர் இதேபோன்று காட்பாடி , கொணவட்டம் , சத்துவாச்சாரி, குடியாத்தம் , பேர்ணாம்பட்டு போன்ற இடங்களிலும் மாவட்டத்தில் ரம்ஜான் தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் பங்கேற்றனர். இதில் ஈத்கா மைதான நுழைவாயிலில் வக்பு வாரிய சொத்துக்களை பாதுகாக்க கோரி நிதியும் வசூ...