• உள்ளாட்சிகள் தினம்.

  • உள்ளாட்சிகள்  தினம் - 01.11.2025   தினத்தன்று   வேலூர் மாவட்டத்தில் 247 கிராம ஊராட்சிகளிலும்  கிராம சபை கூட்டம்  நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர். 

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளதை தொடர்ந்து, வேலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் 01.11.2025 உள்ளாட்சிகள் தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலை 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இக்கிராம சபைக்கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய  பொருள்கள் விவரம்.,

பொருள் 1

:

கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்

பொருள் 2

:

கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை

பொருள் 3

:

ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்

பொருள் 4

:

கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்

பொருள் 5

:

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்

பொருள் 6

:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்

பொருள் 7

:

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II,

பொருள் 8

:

தூய்மை பாரத இயக்க(ஊரகம்) திட்டம்

பொருள் 9

:

இதர பொருட்கள்

 மேற்படி,  கிராம சபைக்கூட்டங்களில் அனைத்து துறை உயர் அலுவர்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள மாவட்ட ஆட்சி தலைவர் உத்திரவிடப்பட்டுள்ளார். மேலும், கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்தும், சிறப்பு மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்தும் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, உத்தரவிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.