• முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

 ·        வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்கள் / சார்ந்தோர்கள் 100 நபர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 40 நபர்கள் மாவட்ட ஆட்சி தலைவர்-டம் மனுக்கள் அளித்தனர். அம்மனுக்கள்மீது சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் வேலூர் மாவட்ட முப்படை வீரர் வாரிய உப தலைவர் துரைராஜ், முன்னாள் படைவீரர் நலத்துறை துணை இயக்குநர் லெப் கர்னல் ஆர்.பழனி வேலு (ஓய்வு)  மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.