• வேலூர் மாவட்டத்தில் தீவிர தூய்மை பணிகள்.


·        வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் 25.05.2026, 26.05.2026 ஆகிய 2 நாட்கள் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் உள்ள பகுதிகளிலும்,  27.05.2026, 28.05.2026, 29.05.2026 ஆகிய 3 நாட்கள்  பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளிலும் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட ள்ளது என  மாவட்ட ஆட்சி தலைவர் தகவல்.

வேலூர் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்களுக்கான குடிநீர், தெருவிளக்கு மற்றும் கழிவுநீர் வெளியேற்றம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் பொதுமக்களுக்கு நாள்தோறும் வழங்கப்பட்ட குடிநீர் அளவு குறித்தும், கோடை வெயில் அதிகமாக உள்ள காரணத்தினால் அடுத்து வரும் நாட்களில் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு தேவையான அளவு குடிநீர் உள்ளதா என்பது குறித்தும், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களிடமும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களிடமும் மாவட்ட ஆட்சி தலைவர் விரிவாக கேட்டறிந்தார்.  குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் அளவில் ஏதேனும் குறைபாடு இருப்பின் அது குறித்து தகவலை உடனடியாக தனது கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் எனவும், அத்தகைய குறைபாடினை ஈடு செய்ய உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்துவதற்கு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளின் மூலம்  வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை,  அரசு பொது மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் ஆகிய சுகாதார அமைப்புகளின் சுற்றுப்புறங்களில் 25.05.2026, 26.05.2026  ஆகிய 2 நாட்கள் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ள  உத்தரவிட்டார்.

அதேபோல் ஜுன் முதல் வாரத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் 27.05.2026, 28.05.2026, 29.05.2026 ஆகிய நாட்களில் அனைத்து தொடக்க, நடுநிலைப், மேல்நிலை பள்ளிகளின் சுற்றுப்புறங்கள், மைதானங்கள், வகுப்பறைகள், கழிவறை பகுதிகள் ஆகியவற்றில் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளவும், பள்ளி கட்டடங்களின் மேற்புற பகுதிகளில் கடந்த வாரங்களில் பெய்த மழையின் காரணமாக ஏதேனும் மழைநீர் தேக்கம் இருந்தால் அவற்றையும் சுத்தப்படுத்தி தூய்மை பராமரிக்க உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில்  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா, வேலூர் மாநகராட்சி ஆணையாளர் இரா.லெட்சுமணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பற்குணன், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.