• பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை.

·         பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை. 

·         தமிழக அரசு அறிவித்துள்ள விவசாய கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு ஏமாற்றம்.  

·         வரும் 1 ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் மாநில பொதுசெயலாளர் உதயகுமார் வேலூரில் பேட்டி.

           வேலூர் மாவட்டம், வேலூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் உதயகுமார் தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு அளித்தார்.

     மனு அளித்த பின்னர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

     தமிழக அரசு அறிவித்துள்ள விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. த.வெ.க. தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளின் அனைத்து பயிர் கடன்களும் தள்ளுபடி செய்யபடும் என அறிவித்தார்.

   ஆனால் தற்போது அறிவித்துள்ள பயிர்கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உதவாது. எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லையென்றால் வரும் ஜுன் 1-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் விவசாயிகளால் ஆர்பாட்டம் செய்யபடும்.

     பின்னர் ஜுலை 5-ம் தேதி சென்னையில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என கூறினார்.


 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.