• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்
· வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 536 கோரிக்கை மனுக்களை பெற்றார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவி தொகை வேளாண்மை துறை, காவல் துறை. ஊரக வளார்ச்சி துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சி துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சார துறை சார்பான குறைகள், மாற்று திறனாளிகள் நல துறை. மருத்துவ துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 536 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்து பெற்று கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
குறை தீர்வு நாள் கூட்டத்தில் இயக்கத் திறன் குறைபாடுடைய 10 மாற்று திறனாளிக்கு தலா ரூ.3000/- வீதம் ரூ.30,000/- மதிப்பிலான முடநீக்கியல் சாதனங்களையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு சீர்மரபினர் நல வாரிய அடையாள அட்டைகளையும், 2025-26ஆம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 95 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.
மேலும் வேலூர் வட்டத்தில் ஆட்சேபகரமான அரசு புறம்போக்கில் குடியிருக்கும் நபர்கள் மற்றும் வேலூர் சுற்று வட்டச்சாலைக்கு நில எடுப்பு செய்வதினால் பாதிக்கப்படும் 56 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா, தனித்துனை ஆட்சியர் (ச.பா.தி) சி.மாறன், துணை ஆட்சியர் (பயிற்சி) கணேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், முதன்மை கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா, மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment