• நிலம் வாங்கி தருவதாக ரூ.1.50 கோடி மோசடி.
· நிலம் வாங்கி தருவதாக ரூ.1.50 கோடி மோசடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் புகார்.
வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்சிடம் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை சேர்ந்த ஆனந்தன் என்பவர் புகார் மனு அளித்தார்.
அதில் சந்திரபோஸ் என்பவர் பஞ்சமி நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி போலி ஆவணங்களை தயார் செய்து என்னிடம் பணம் ரூ.1.50 கோடி பெற்றுகொண்டு என்னை ஏமாற்றினார். மேலும் அந்த இடத்தை வேறு ஒருவருக்கும் பதிவு செய்து பணம் பெற்று கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், இதற்கு வங்கியில் பணிபுரியும் அருண் என்பவரும் உடந்தை. எனவே போலி பத்திர பதிவுகளை ரத்து செய்து என பணம் ரூ.1.50 கோடியை மீட்டு தர வேண்டும். பஞ்சமி நிலத்தை அரசே எடுத்து கொள்வதுடன் சந்திரபோஸ் மற்றும் அருண் ஆகியோர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனுவை அளித்தார்.
பேட்டி: ஆனந்தன் (பாதிக்கப்பட்டவர்).

Comments
Post a Comment