• பேருந்தில் நகைகள் திருடிய 2 பெண்கள் கைது.
· பேருந்தில் நகைகள் திருடிய 2 பெண்களை சிசிடிவி காட்சிகளை வைத்து கைது.
வேலூர் மாவட்டம், வேலூர், பழைய பேருந்து நிலையத்தில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடப்பதாக வந்த புகார்களை அடுத்து வேலூர் வடக்கு காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் சாத்துப்பாளையத்தை சேர்ந்த திவ்யா என்ற பெண் பெங்களூரு சென்று விட்டு பேருந்தில் மீண்டும் தங்க நகைகளை கைப்பையில் போட்டு கொண்டு வேலூர் வந்தார். பழைய பேருந்து நிலையத்தில் பார்த்தபோது பையில் வைத்திருந்த 8.5 சவரன் தங்க நகைகள் காணவில்லை.
இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் திவ்யா புகார் அளித்ததை தொடர்ந்து வடக்கு காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், கட்டமடுவு பகுதியை சேர்ந்த மஞ்சுளா (27) அதே பகுதியை சேர்ந்த சவுந்தர்யா (29) ஆகிய இரண்டு பெண்கள் திருட்டில் ஈடுபட்ட என தெரியவந்தது. இரண்டு பெண்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 8.5 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர். கைதான இரண்டு பெண்கள் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment