• வேலூரில் 220-வது சிப்பாய் புரட்சி நினைவு தினம்.
· · இந்தியாவின் முதல் சுந்தந்திர போராட்டமான சிப்பாய் புரட்சியில் பலியான 800 இந்திய ராணுவ வீரர்களுக்கு வேலூரில் 220-வது சிப்பாய் புரட்சி நினைவு தினத்தில் சிப்பாய் நினைவு தூணுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் மலர் வளையம் வைத்து நினைவு அஞ்சலி.
வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை அருகில் உள்ள சிப்பாய் புரட்சியின் 220-வது ஆண்டை முன்னிட்டு சிப்பாய் புரட்சி நினைவு தூண் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் தலைமையில் அரசு அதிகாரிகள் மலர் தூவி மலர் வளையம் வைத்து காவலர்களின் இசையுடன் அஞ்சலியை செலுத்தினார்கள்.
1806-ம் ஆண்டு ஜுலை 10-ஆம் நாள் வேலூர் கோட்டையினுள் சிப்பாய் புரட்சி ஏற்பட்டது. அப்போதைய ஆங்கில அரசின் மதராஸ் படையின் முதன்மை தளபதி சர் ஜான் கிரேடக் என்பவன் பல புதிய விதிமுறைகளை புகுத்தினான். இந்துக்கள் கடுக்கன் அணிய கூடாது. நெற்றியில் சமய சின்னங்களை அணிய கூடாது. இஸ்லாமியர்கள் தாடி அகற்றி மீசை வைத்து கொள்ள வேண்டும். பசு தோலால் ஆன சுங்கு தொங்கும் குல்லா அணிய வேண்டும். சிலுவை போன்ற சின்னத்தை மார்பில் அணிய வேண்டும் என கூறியதால் இதனை ஏற்காத இந்திய சிப்பாய்கள் 1806-ம் ஆண்டு ஜுலை 10-ம் நாள் விடியற்காலை 4 மணிக்கு கோட்டையில் புரட்சி செய்து ஆங்கிலேயே அதிகாரிகளையும் வீரர்கள் சிலரையும் கொன்றனர். கோட்டையில் பறந்த ஆங்கில அரசின் யூனியன் கொடியை இறக்கிவிட்டு திப்புவின் புலிக்கொடியை ஏற்றினார்கள்
இதனால் ஆத்திரமடைந்த ஆங்கில அரசு ராணிப்பேட்டையில் இருந்து காலப்பர் துப்பாக்கி படைகளை கொண்டு வந்து கோட்டையினுள்ளே புகுந்து இந்திய ராணுவ வீரர்கள் 800-க்கும் மேற்பட்டோரை சுட்டு கொன்றனர். இதுதான் இந்தியாவின் முதல் சுதந்திர போருக்கு விதித்திட்ட புரட்சியாகும். இதில் இறந்த ராணுவ வீரர்களுக்கு ஆண்டுதோறும் சிப்பாய் புரட்சி நினைவு தினத்தில் முன்னாள் படை வீரர்கள் காவல் துறையினர் பொதுமக்கள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன், மேயர் சுஜாதா, சட்டமன்ற உறுப்பினர்கள் வினோத்கண்ணா, சுதாகர், சிந்து மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேவேந்திரன், வாலாஜா அசேன், முன்னாள் படைவீரர் நல அலுவலர் பழனிவேல் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Comments
Post a Comment