• காட்பாடி ஊராட்சி ஒன்றியம் - வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு .

·        காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறை, பள்ளிகள், நியாய விலை கடை, மாவட்ட விளையாட்டு அரங்கம் மற்றும் தோழி விடுதி ஆகிய பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் வள்ளிமலை, மேல்பாடி, விண்ணம்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் நாற்றாங்கால் பண்ணை பணி,  பள்ளிகள், நியாய விலை கடை, மாவட்ட விளையாட்டு அரங்கம் மற்றும் தோழி விடுதி ஆகிய பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.

                வள்ளிமலை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின்கீழ் ரூ.9.45 இலட்சம் மதிப்பில் 7,500 மரக்கன்றுகள், ரூ.2.52 இலட்சம் மதிப்பில் 2,000 மரக்கன்றுகள் உருவாக்கும் வகையில் அமையவுள்ள நாற்றாங்கால் பண்ணையினை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணிகளுக்காக தற்பொழுது அவ்விடம் சீர் செய்யப்பட்டுள்ள நிலையில் பணிகளை உடனடியாக தொடங்க அறிவுறுத்தினார்.

                காட்பாடி ஊராட்சி ஒன்றியம், விண்ணம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவ, மாணவிகளின் கற்றல் திறன்களை கேட்டறிந்தார். மேலும், பள்ளியில் உள்ள மதிய சத்துணவு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  சத்துணவு மையத்தில் மாணவ, மாணவிகளுக்கு சமைக்கும் உணவுக்கான அரிசி, பருப்பு மற்றும் முட்டை ஆகியவற்றை பார்வையிட்டார். சத்துணவு மையத்திற்கு போதிய வெளிச்சம் வரும் வகையில் மின்விளக்கு அமைக்க அறிவுறுத்தினார்.

                தொடர்ந்து மேல்பாடி ஊராட்சிக்குட்பட்ட கோட்டநத்தம் பகுதியில் உள்ள  முழுநேர நியாய விலை கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நியாய விலை கடையில் உள்ள அத்தியாவசிய பொருட்களின் இருப்பு குறித்த பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும், இந்நியாய விலை கடையில் உள்ள 394 குடும்ப அட்டைதாரர்களில் எத்தனை நபர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் கேட்டறிந்தார். நியாய விலை கடையில் உள்ள தகவல் பலகையில் வட்ட வழங்கல் அலுவலர், விற்பனையாளர் ஆகியோரின் தொலைபேசி எண்கள் எழுதப்பட்டுள்ளதா என்பதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

                பின்னர் மாவட்ட ஆட்சி தலைவர் வள்ளிமலை அரசு மேல்நிலை பள்ளியை  பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பள்ளியில் உள்ள கழிவறைகளை பார்வையிட்டு, சுத்தமாகவும், சுகாதாரத்தோடும் பராமரிக்க அறிவுறுத்தினார். பள்ளிக்கு தேவையான தண்ணீர் வசதியினை அருகிலுள்ள ஊராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து இணைப்பு வழங்க அறிவுறுத்தினார். மேலும், பள்ளி வளாகத்தில் இடிக்கப்பட்ட பழுதான கட்டிடத்தின் கட்டுமான கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்தார். பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியை சுற்றுசுவர் இல்லாத இடத்தில் தற்காலிக வேலி அமைக்கவும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து காட்பாடியில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள நீச்சல் குளம், வெளிவிளையாட்டு மைதானம், உள்விளையாட்டு அரங்கம், புதியதாக அமைக்கப்பட்டு வரும் பாக்ஸ் கிரிக்கெட் மையம் (Turf), விளையாட்டு வீரர்களுக்கான சமையற்கூடம், விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் சுற்றுசுவர் கட்டுமான பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது இங்கு தங்கி பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்களிடம், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு அரசு தெரிவித்துள்ள அட்டவணையின்படி வழங்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். மேலும், விளையாட்டு வீரர்களுக்கு தயார் செய்யப்பட்டிருந்த மதிய உணவின் தரத்தினை சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார். 

இதனை தொடர்ந்து சமூக நல துறையின்கீழ் காட்பாடி ராஜீவ்காந்தி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தோழி பணிபுரியும் பெண்கள் தங்கும் விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்து ஆய்வின்போது விடுதியில் உள்ளஅறைகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள், கழிவறை வசதிகள், கண்காணிப்பு கேமிரா ஆகியவற்றை பார்வையிட்டார்.

                இந்த ஆய்வின்போது காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வே.வேல்முருகன், மாவட்ட திட்ட இயக்குநர் (பொ) ராமசந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் முனைவர் வி.சேதுராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் உமா,  காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி, காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, சா.செல்வி ஆகியோர்  உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.