• வேலூர் அந்தியோதயா அன்ன யோஜனா பயனாளிகள் சரிபார்ப்பு பணி.
· வேலூர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டப் பயனாளிகள் சரிபார்ப்பு பணி நடைபெறவுள்ளது - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர்.
வேலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டப் பயனாளிகளை நூறு சதவிகிதம் சரிபார்க்கும் பணி வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் நியாய விலை கடைகளின் விற்பனையாளர்கள் மூலமாக அரசின் அறிவுறுத்தலின்படி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளின் மெய்த்தன்மை மற்றும் ஏற்கனவே வழங்கியுள்ள முகவரியில்தான் பயனாளிகள் வசித்து வருகிறார்களா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியை வருகின்ற 15.07.2026 தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு செய்ய வரும்போது அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின்கீழ் பயன்பெற்றுவரும் நபர்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment