• சன்பீம் பள்ளிகளின் பவள விழா.

·         சன்பீம் பள்ளிகளின் பவள விழா. 

·         சன்பீம் பள்ளிகள் கல்லூரியாகவும், பல்கலைகழகமாகவும் வளர வேண்டும்.

·         விருதுகள் வழங்கி வி..டி வேந்தர்  ஜி.விசுவநாதன் பேச்சு

   வேலூர் மாவட்டம், காட்பாடி, சன்பீம் பள்ளிகள் கல்லூரியாகவும், பல்கலைகழகமாகவும் வளர வேண்டும் என நட்புக்கு விருதுகள் வழங்கி வி..டி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசினார்.

     வேலூர் காந்தி கல்வி அறக்கட்டளை சார்பில் சன்பீம் பள்ளிகளின் பவள விழாவையொட்டி 'நட்புக்கு நன்றி விருது' வழங்கும் விழா நடந்தது.

   சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன் தலைமை தாங்கி பேசுகையில்,

           பள்ளி 35 ஆண்டுகளை நிறைவு செய்து பவள விழாவை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.  பள்ளியின் வளர்ச்சிக்கு துணை நின்ற நண்பர்களை கவுரவிப்பதே இந்த விழாவின் நோக்கம் என்றார். பள்ளி தாளாளர் தங்க பிரகாஷ் முன்னிலை வகித்தார். துணைதலைவர் டாக்டர் ஜார்ஜ் அரவிந்த் வரவேற்றார்.

     சிறப்பு விருந்தினராக வி..டி வேந்தர் ஜி. விசுவநாதன் கலந்து கொண்டு, சன்பீம் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவிய பேராசிரியர் சாலமன் பாப்பையா, ஓய்வு பெற்ற நீதிபதி சுப்ரமணியன், டாக்டர்கள் அருளாளன், குமரகுரு, புலவர் நாராயணன், தேவி மோட்டார்ஸ் பிரபாகர், வக்கீல்கள் ரவிக்குமார், ரவிசங்கர், பேராசிரியர் கண்ணன், குமரன் சீனிவாசன், வி.கருணாகரன், ஓய்வு பெற்ற மாவட்ட கருவூல அலுவலர் சிலுப்பன் உள்பட 50 பேருக்கு  விருதுகளை வழங்கி  பேசியதாவது;

     தமிழ்நாட்டின் சிறந்த பள்ளி சன்பீம் பள்ளி 35 ஆண்டு காலத்தில் வளர்ந்து தமிழ்நாட்டின் மிக சிறந்த பள்ளிகளில் ஒன்றாக வந்து விட்டது. நிச்சயம் இன்னும் இது வளரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

     நாம் இன்றைக்கு உலகத்தோடு போட்டி போட வேண்டும். அப்படி போட்டியிடுவதற்கு நல்ல பள்ளி கல்வி தான் கடக்கால் போன்ற இடம். உயர்கல்வி என்பது கட்டிடம் கட்டுவது. ஆக நாம் பள்ளி கல்வியை பலப்படுத்தினாலே ஒழிய மிகப்பெரிய அளவில் நாம் உலகத்தில் போட்டி போட முடியாது. நம்முடைய கல்வியில்  மாற்றங்களை  மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து செய்ய வேண்டும்.

   கல்வியை அடிப்படையாக வைத்துதான் நாம் வளர வேண்டும். உயர்கல்வியிலே நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் பள்ளிக் கல்வி மிகத் தரமாக இருக்க வேண்டும். 30, 40 ஆண்டுகளுக்கு முன்னால் சீனா நம்முடன் இருந்தது. இப்பொழுது அவர்கள் 75 சதவீதத்தை தொட்டுவிட்டார்கள். நாம் 28 சதவீதத்தில் இருக்கிறோம். மாணவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை நிறுவப்பட்டது. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக  சுமார் 12 ஆயிரம் பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கி உள்ளோம்.

     மாணவர்களுக்கு படிக்கும் காலம் மிக முக்கியமானது. அதற்கான நேரத்தை நீங்கள் செலவழித்து, கொஞ்ச நேரம் பொழுது போக்கு, விளையாட்டுக்காக செலவழியுங்கள் தவறில்லை. மிச்சம் இருக்கிற நேரத்தை படிப்புக்காக செலவிடுங்கள். உங்களை நம்பி குடும்பம் இருக்கிறது. இப்பொழுது நல்ல வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.

    மாணவர்கள் வெளிநாடுகளுக்கு போவதற்கு ஆங்கிலம் முக்கியம். பள்ளி கல்லூரியாக வளர வேண்டும். உலகெங்கும் இருக்கிற மொழி. மாணவர்கள் ஒழுங்காக ஆங்கிலத்தை பேசவும், எழுதவும் பழகுகின்ற  வாய்ப்பை ஆசிரியர்கள் அளிக்க வேண்டும். சன்பீம் கல்வி நிறுவனங்கள் மிகச் சிறந்த கல்லூரியாகவும், பல்கலைகழகமாகவும் வளர வேண்டும் என்றார்.

    விழாவில் சன்பீம் பள்ளிகளின் ஆயிரக்கணக்கான மாணவர்கள்,    500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்பட 4,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.