• வேலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்பாட்டம்.
· வேலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்தும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சு-க்கு ஆதரவாக ஆர்பாட்டம்.
வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் ஜோஷி தலைமையில் கண்டன ஆர்பாட்டமானது நடைபெற்றது.
நீட் முறைகேடு மற்றும் கல்வி துறையின் சீரழிவை பொறுப்பேற்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தடியடி நடத்தியதை கண்டித்தும், சமூக ஆர்வலர் சோனம் வாங்சு-க்கு ஆதரவாகவும் இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் வருவாய் துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ், நிர்வாகிகள் தீனாசேகர் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Comments
Post a Comment