• பொன்னை சி.ஆர்பி.எப். பெண் வீரரின் வீட்டில் நகை திருட்டு.

 ·         பொன்னை அருகே சி.ஆர்பி.எப். பெண் வீரரின் வீட்டில் 22.5 சவரன் நகை     திருட்டு.

 ·         பல மாதங்களாகியும் குற்றவாளியை பிடித்தும் நகையை மீட்டு தராமல் பொன்னை காவல் துறையினர் அலைகழிப்பு - மாவட்ட ஆட்சியரிடம் சி.ஆர்.பி.எப். பெண் வீரர்  நேரில் மனு.

            வேலூர் மாவட்டம், பொன்னை அருகேயுள்ள நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கலாவதி. இவர் மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் (சி.ஆர்.பி.எப்) வெளிமாநிலத்தில் பணியாற்றுகிறார். இவரின் தாய் மற்றும் தந்தை விவசாயம் செய்து வருகின்றனர்.

     கடந்த ஜுன் 24, 2025 அன்று இவர் வீட்டில் மொத்தம் 22.5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.

     நகைகள் திருடு போனது குறித்து பொன்னை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து போலியான குற்றவாளியை கைது செய்து இந்த வழக்கை முடித்து வைத்ததுடன் நகைகள் எதுவும் பறிமுதல் செய்யவில்லை என கூறியுள்ளனர்.

     இதுகுறித்து வள்ளிமலை அருகே கிராமத்திற்கு அரசு விழாவில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் வந்தபோது சி.ஆர்.பி.எப் வீரர் கலாவதி தனது நகைகளை மீட்டு தருமாறும் தன்னை ஏமாற்றும் பொன்னை காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.