• வேலூர் கோட்டையினுள் சிப்பாய் புரட்சி மெழுகுவர்த்தி அஞ்சலி .
· சிப்பாய் புரட்சி தோன்றிய வேலூர் கோட்டையினுள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
· கோட்டையினுள் சிப்பாய் புரட்சி நினைவு தூணை மத்திய அரசு அமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை.
வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டையில் உள்ளே உள்ள அரசு அருங்காட்சியகத்தில் சிப்பாய் புரட்சி தோன்றிய இடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி பொதுமக்கள் அஞ்சலியை செலுத்தினர்.
வேலூர் அரசு அருங்காட்சியகம், வேலூர் அறிவியல் இயக்கம் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இந்த விழாவில் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ரோட்டரி சங்க செயலாளர் பீமாராவ் மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி நிகழ்வை துவங்கினார்.
இதில் அறிவியல் இயக்க பொறுப்பாளர் சிலுப்பன், முரளிதரன், சந்துரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதில் அருங்காட்சியகத்தில் ஆங்கிலேய படை தளபதி கிளெஸ்பி இந்தியர்களால் சிறை வைக்கப்படுவதை போல ஓவியம், சிப்பாய் புரட்சியில் ஆங்கிலேய படையினர் கொல்லப்பட்டு இந்திய வீரர்கள் வென்று வேலூர் கோட்டையில் திப்புவின் புலி கொடியை ஏற்றுவதை போன்றும், திப்பு குடும்பத்தினர் ஆங்கிலேயர்களால் வேலூர் கோட்டையினுள் சிறை வைக்கப்பட்டுள்ளதை போலவும், சிப்பாய் புரட்சியில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்படுவதை போன்ற தத்ரூபமான ஓவியங்களை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
1806-ம் ஆண்டு ஜுலை 10-ம் நாள் சிப்பாய் புரட்சி வேலூர் கோட்டையினுள் நடந்தது. இதில் 800-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கோட்டையினுள் கொல்லப்பட்டனர். ஆனால் இதுவரை கோட்டையில் நினைவு தூண் அமைக்கப்படவில்லை. எனவே மத்திய அரசு கோட்டையினுள் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டமான சிப்பாய் புரட்சியில் இறந்த இந்திய வீரர்களின் நினைவாக நினைவு தூணும் ஒளி, ஒலி காட்சி அமைப்பு கூடமும் அமைக்க வேண்டும். இதல் வருங்கால சந்ததியினர் பயன் பெறுவார்கள் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோருகின்றனர்.

Comments
Post a Comment