• வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழு உறுப்பினர் பட்டியல் தயார் செய்யும் பணி.

  • வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை  நிர்வாக குழு தேர்தலுக்காக உறுப்பினர் பட்டியல் தயார் செய்யும் பணி  நடைபெற்று வருவதால்  15.07.2026-ந் தேதிக்குள் பதிவு செய்யமாறு மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சர்க்கரை ஆலையின் தலைவர், நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.

                        இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணைப்படி கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் பட்டியலில் இறந்தவர்களை நீக்குதல், ஆதார் எண் இணைத்தல் போன்றவை மேற்கொண்டு முழுமையான உறுப்பினர் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

                        எனவே ஆலையின் அங்கத்தினர்கள் அனைவரும் தங்களுடைய ஆதார் எண் விவரங்களை தங்கள் பகுதி கரும்பு கோட்ட அலுவலகத்தில் பணிபுரியும் களப்பணியாளர்களை தொடர்பு கொண்டு வருகிற  15.07.2026-ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

                        எதிர்வரும் காலங்களில் நடைபெறும் கூட்டுறவு சங்க தேர்தல்களில் கலந்துகொள்வதற்கும், வாக்களிப்பதற்கும் தொடர்ந்து உறுப்பினர் பட்டியலில் தங்களது பெயர்கள் இருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாகவும் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.