• வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை ஆட்சியர் ஆய்வு.

·        வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் கற்பகம் சுயசேவைப் பிரிவை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு.

வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் கற்பகம் சுயசேவைப் பிரிவை மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் மாவட்ட ஆட்சி தலைவர் அண்ணாசாலை கற்பகம் சுயசேவை பிரிவில் ஆய்வு மேற்கொண்டு விற்பனை அதிகரிப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினார். மேலும் மகளிர் சுய உதவிக் குழு மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை சுயசேவை பிரிவில் தனி அலமாரிகளை  அமைத்து விற்பனை மேற்கொள்ள வழிவகை செய்யுமாறு அறிவுரை வழங்கினார். அதே வளாகத்தில் அமைந்துள்ள அரசு பொது இ-சேவை மையத்தில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சான்றுகளையும் துரித முறையில் விண்ணப்பம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், நியாய விலை கடைகளில் ஆய்வு மேற்கொண்டு தரமான பொருட்களை விநியோகம் செய்வதை உறுதி செய்யுமாறும் தெரிவித்தார்.

தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு பொது இ சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மையங்களை  பார்வையிட்டு ஆய்வு செய்து, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்கள். பின்னர் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  

இந்த ஆய்வின்போது வேலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.திருகுணஐயப்பதுரை மற்றும் கற்பகம் கூட்டுறவு பண்டக சாலையின் இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் ஆ.பழனிச்சாமி, வட்டாட்சியர் பழனி, மாவட்ட மின் மேலாளர் அரவிந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

  

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.