• ஆற்காடு குளோபல் பள்ளி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு.

·         ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி குளோபல் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு.

     ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி குளோபல் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

      இந்நிகழ்ச்சியில் 14 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கான மாவட்ட அளவில் டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2026  சோளிங்கரில் நடைபெற்றது. இப்போட்டியில் 8 மற்றும் 12 வகுப்பு மாணவியர்கள்  பங்கேற்று மாவட்ட அளவில்  முதல் பரிசு பெற்றுள்ளனர்.

     அதனை தொடர்ந்து இராணிப்பேட்டை மாவட்டம், Ranipet District WUSHU Sports Association நடத்திய குங்ப்பூ போட்டியில் 8 மற்றும் 7-ம் வகுப்பை சார்ந்த திகழ்நிலா S, விஷ்வா R என்ற மாணவர்கள் பங்கேற்று வெண்கல பதக்கமும், பாராட்டு சான்றிதழும் பரிசு பெற்றுள்ளனர். 

     மேலும் கல்விக்கண் கொடுத்த கர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழா நாடார் மஹாஜன சங்கம், மதுரை கல்வி திருவிழா 2026 மாவட்ட அளவில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சானறிதழ் வழங்கப்பட்டது.

     இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவர் Rtn.PHF. ஸ்ரீ பாலாஜி லோகநாதன், சிறப்பு விருந்தினராக வேலூர் சத்துவச்சாரி செங்கானத்தம், தவத்திரு பகவதி சித்தர் சுவாமி பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

        இந்நிகழ்ச்சியில் ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி குளோபல் பள்ளி துணை முதல்வர் கோமதி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

   இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் சாந்தி பாலாஜி, தாளாளர் கோமதி பாலாஜி, இணைசெயலாளர் செல்வி வைஷ்ணவி ஆகியோர் செய்திருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.