• வேலூர் மாற்று திறனாளி சிறப்பு குறை தீர்வு கூட்டம்.

·        வேலூர் மாவட்ட  மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்வு கூட்டம்.

·        8 மாற்று திறனாளிகளுக்கு ரூ.29,205/- மதிப்பில் சக்கர நாற்காலி, காதொலி கருவி, ஊன்றுகோல் உள்ளிட்ட உபகரணங்களை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.

                வேலூர் மாவட்டத்தில், மாற்று திறனாளிகளுக்கான குறைகளை களையும் பொருட்டு சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் மாவட்ட அளவிலான மாற்று திறனாளிகள் நல சங்க நிர்வாகிகள், துறை அலுவலர்கள் கொண்டு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை குறை தீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

                அதன்படி வேலூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கான குறைகளை களையும் பொருட்டு சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், தலைமையில் ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில்  நடைபெற்றது.

                மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்வு நாள் கூட்டத்தில் சுமார் 150-க்கு மேற்பட்ட பல்வேறு வகையான மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர். அதில் வீட்டுமனை பட்டா, அடுக்குமாடி குடியிருப்பு, மாற்று திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை, நூறு நாள் வேலை, உதவி உபகரணங்கள், AYY குறியீடு கொண்ட குடும்ப அட்டை மற்றும் இதர நலத்திட்ட உதவிகள் வழங்க கோரி அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவிட்டார். .

                மேலும், சக்கர நாற்காலி, காதொலி கருவி, ஊன்றுகோல் ஆகிய உதவி உபகரணங்கள் கோரி விண்ணப்பித்த 08 மாற்று திறனாளிகளுக்கு ரூ.29,205/- (ரூபாய் இருபத்து ஒன்பதாயிரத்து இருநூற்று ஐந்து மட்டும்) மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மத்திய அரசின் தேசிய அறக்கட்டளை வாயிலாக வழங்கப்படும் அறிவுசார் குறைபாடுடைய / மனவளர்ச்சி குன்றிய 05 மாற்று திறனாளிகளின் பாதுகாவலருக்கு சட்டப்பூர்வ பாதுகாவலர் சான்று (Legal Gaurdianship Certificate), மனநிலை பாதிக்கப்பட்ட 01 மாற்று திறனாளியின் பாதுகாவலருக்கு சட்டபூர்வ பாதுகாவலர் சான்று (Limited  Gaurdianship Certificate) ஆகியவற்றை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

                இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட சமூக நல அலுவலர் உமா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சி.மாறன், மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.