• பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம்.
· வேலூர் மாவட்ட விவசாயிகள் காரீப் பருவ பயிர்களை பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர்.
வேலூர் மாவட்டத்தில் 2026-2027-ஆம் ஆண்டுக்கு பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்வதற்கு KSHEMA நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொதுத் துறை வங்கிகள், அரசு பொது சேவை மையங்களில் உரிய கட்டணத் தொகையை செலுத்தி பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.
நெல் பயிரை காப்பீடு செய்வதற்கு பிரீமியம் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.764/-ம், துவரை ஏக்கருக்கு ரூ.374/-ம், நிலக்கடலை ஏக்கருக்கு ரூ.644/-ம் செலுத்தி பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கு விவசாயிகள் அனைவரும் கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள கைபேசி ஆகியவற்றைக் கொண்டு சென்று காப்பீடு செய்து கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அருகிலுள்ள வட்டார வேளாண்மைஉதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ். லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment