• பள்ளிகொண்டா, குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் ஆய்வு.

· பள்ளிகொண்டா மற்றும் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.

                வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், பள்ளிகொண்டா மற்றும்  குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி கட்டுவதற்கான நிரந்தர  இடம் தேர்வு செய்வது குறித்து பள்ளிகொண்டா அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியின் இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

தொடர்ந்து சி-2063 குடியாத்தம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பு நிலையம் மற்றும் சூரிய ஒளி உலர்களத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சூரிய ஒளி உலர்களம் மற்றும் எண்ணெய் பிழியும் இயந்திரத்தின் கொள்ளளவு குறித்து கேட்டறிந்தார். உலர்களத்தின் கொள்ளளவு-7500 தேங்காய் / ஒரு நாளை, எண்ணெய் பிழியும் இயந்திரம் கொள்ளளவு-10 கிலோ/செக்கு என தெரிவித்தனர். ஒரு நாளைக்கு சூரிய ஒளி உலர்களத்தில் 2000 தேங்காய்கள் உலர வைக்கப்படுகிறது எனவும், எண்ணெய் பிழியும் இயந்திரத்தில் ஒரு நாளைக்கு 75-80 லிட்டர் செக்காடப்படுகிறது எனவும் தெரிவித்தனர். மேலும், பருத்தி 2025-26 நிதியாண்டில் 312 டன் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து குடியாத்தம் டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளர் கூட்டுறவு பண்டக சாலையால் நடத்தப்பட்டு வரும் கடை எண் 13 நியாய விலை கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின்போது அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தரமாக உள்ளதா என்பது குறித்தும், சரியான எடையில் கிடங்குகளில் இருந்து பொருட்கள் வரப்பெறுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது- தரமான பொருட்களை மட்டுமே குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என விற்பனையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. தாயுமானவர் திட்டத்தின்கீழ் எத்தனை பயனாளிகள்  பயன் பெறுகின்றனர் என கேட்டறிந்தார். கிடங்குகளிலிருந்து நியாயவிலைக் கடைகளுக்கு வரப்பெறும் அத்தியாவசியப் பொருட்களை First in First out என்ற முறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.

பின்னர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூபாய் 3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கத்தின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பள்ளி மாணவ, மாணவிகளிடம் கற்றல் திறன் மற்றும் விளையாட்டு ஆர்வம் குறித்து கேட்டறிந்தார்.

        தொடர்ந்து குடியாத்தம் நகராட்சி நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நூலகத்திற்கு வந்திருந்த கல்லூரி மாணவ, மாணவிகளிடம் நூலக கணினி மற்றும் புத்தக  பயன்பாடு குறித்து கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து குடியாத்தம் நகராட்சி, தங்கம் நகரில்  தூய்மை இந்தியா  திட்டம் 2.0 திட்டத்தின்கீழ் ரூ.1228 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கழிவுநீர் சேகர தொட்டியின் கட்டுமான பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணிகளை விரைந்து முடிக்கவும், மற்ற கழிவுநீர் சேகர தொட்டிகள் கட்டுமான பணிகள் குறித்த காலத்தில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.

பின்னர் குடியாத்தம் நகராட்சியில் 15வது மத்திய நிதிக்குழு திட்டத்தின்கீழ் ரூ.170 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் கொள்கலன் கட்டுமான பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணியினை உரிய காலத்தில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.

தொடர்ந்து குடியாத்தம் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டத்தின்கீழ் ரூ.1958 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய தரை பகுதி கான்கீரிட் அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின்போது மண் அகற்றும் வேலையில் வெளிவரப்பெற்ற குப்பைகளை பயோ மைனிங் முறையில் பிரித்தெடுக்க அறிவுறுத்தினார். மேலும், சுத்திகரிப்பு நிலைய பணியினை ஒப்பந்த காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார். குடியாத்தம் உள்ளி உரக்கிடங்கில் உள்ள கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரப்பெறும் கழிவுநீர் அகற்று வாகனங்கள் அனைத்தும் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வருவதை உறுதி செய்ய அறிவுறுத்தினார். மேலும் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் அதிகப்படியான செடிகளை அமைக்க அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க.சிந்து, குடியாத்தம் நகர்மன்ற தலைவர் எஸ்.சௌந்தராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா, கூட்டுறவு சார்பதிவாளர் தனலட்சுமி, துணை பதிவாளர் (பொது விநியோக திட்டம்) சுவாதி,  குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் பழனிச்சாமி, குடியாத்தம் வட்டாட்சியர் பிரியா, பள்ளிகொண்டா பள்ளி தலைமையாசிரியர் ராஜேஷ்கண்ணா, அரசு மாதிரி பள்ளி தலைமையாசிரியர் தமிழ்பிரியா உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.