• வேலூர் வாசகர் வட்டம் கவிஞர் வாலி சிறப்பு பட்டிமன்றம்.
· வேலூர் வாசகர் வட்டம் சார்பில் காவிய கவிஞர் வாலியின் நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம்.
· கவிஞர் லக்குமிபதி பங்கேற்பு
வேலூரில் உள்ள சண்முகனடியார் சங்கத்தில் வேலூர் வாசகர் வட்டம் சார்பில் காவியக் கவிஞர் வாலியின் நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவிற்கு பிரியா குழுமத்தை சேர்ந்த பிரியாசுரேஷ் தலைமை தாங்கி பேசினார்.
சைன் ஜீனியஸ் டி.பன்னீர்செல்வம், இம்பீரியல் பஸ் உரிமையாளர் ஸ்ரீதர் ஜெயபால், சண்முகனடியார் சங்க செயலாளர் பு.தட்சிணாமூர்த்தி, வேலூர் அனைத்து வணிகர் சங்க தலைவர் அசோகன், வேலூர் வாசகர் வட்ட அறங்காவலர் தி.ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் வேலூர் மண்டல தலைவர் இரா.ப.ஞானவேலு பட்டிமன்றத்தை தொடங்கி வைத்து பேசினார்.
காவிய கவிஞர் வாலியின் பாடல்களில் மக்கள் மனதை பெரிதும் கவர்ந்தது குடும்ப உறவு பாடல்களா? சமூக உணர்வு பாடல்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. கவிஞர் ச.லக்குமிபதி நடுவராக இருந்தார். குடும்ப உறவு பாடல்களே என்ற அணியின் தலைவராக பேராசிரியர் பொன். செல்வகுமார், தன்னம்பிக்கை பேச்சாளர் மணிவண்ணன், ஆரணி பெரியசாமி ஆகியோரும், சமூக உணர்வு பாடல்களே என்ற அணியின் தலைவராக கவிஞர் எஸ்.கே.எம்.மோகன், சமூக சேவையாளர் சி.பி.சரவணன், கவிஞர் ஆ.ஜோசப் அன்னையா ஆகியோரும் வாதிட்டனர்.
குடும்ப உறவு பாடல்களும், சமூக உணர்வு பாடல்களும் கவிஞர் வாலியின் இரண்டு கண்கள். எனவே இவை இரண்டுமே மக்கள் மனதை பெரிதும் கவர்ந்தது என பட்டிமன்ற நடுவர் கவிஞர் ச.லக்குமிபதி தீர்ப்பளித்தார். விழாவில் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் சந்திரபிரகாஷ், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சந்துரு, எக்ஸிபிஷன் சரவணன், விருபாட்சிபுரம் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வேலூர் வாசகர் வட்ட அறங்காவலர் வை.அருணகிரி நன்றி கூறினார்.

Comments
Post a Comment