• வேலூரில் செய்தியாளர்கள் ஆர்பாட்டம்.
· செய்தியாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் செய்தியாளர்கள் ஆர்பாட்டம்.
வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அனைத்து நாளிதழ் மற்றும் அனைத்து தொலைக்காட்சி செய்தியாளர்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சோளிங்கரில் செய்தி சேகரிக்க சென்ற தினகரன் நாளிதழ் செய்தியாளர் அரங்கநாதன் மற்றும் தினமலர் நாளிதழ் செய்தியாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் மீது, தவெக சட்டமன்ற உறுப்பினர் கபில், அவரது தம்பி மற்றும் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காயமடைந்த இரு செய்தியாளர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து திரளான செய்தியாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Comments
Post a Comment