• வேலூர் மாவட்ட தூய்மை பணியாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்.


 ·        வேலூர் மாவட்டத்தில் 'தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின்' (SWDS) கீழ், தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான பல்வேறு நலத்திட்டங்கள், சமூக பாதுகாப்பு, வாழ்வாதாரம், திறன் மேம்பாடு மற்றும் நிதி சேவைகள் சென்றடைதல் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் 'தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின்' (SWDS) கீழ், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான பல்வேறு நலத்திட்டங்கள், சமூகப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், திறன் மேம்பாடு மற்றும் நிதி சேவைகள் சென்றடைதல் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் சமூக-பொருளாதார நல்வாழ்வு, வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் கண்ணியம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக, அரசு வழிகாட்டுதலின் படி, தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய பதிவு, ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல், குடும்ப அட்டை சேவைகள், சாதி / சமூக சான்றிதழ், வருமான சான்றிதழ், மாற்று திறனாளி சான்றிதழ், முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் (CMCHIS) மற்றும் PM-JAY,  காசநோய், தோல் நோய் மற்றும் தொழில்சார் உடல்நல பரிசோதனை, வங்கி கணக்கு தொடங்குதல், கல்வி உதவி தொகைகள், திறன் மேம்பாட்டு பயிற்சி சேர்க்கை, முதியோர் ஓய்வூதியம் மற்றும் திருமண உதவி திட்டங்கள் ஆகிய சேவைகள் வழங்குவதற்கு ஓருங்கிணைந்த முகாம் நடத்த  விரிவாக ஆலோசிக்கப்பட்டது..

 இம்முகாம் பேர்ணாம்பட்டு நகராட்சியில் 23.07.2026 அன்று ஸ்டார் பங்ஷன் ஹால், ஆம்பூர் மெயின் ரோடு, பேர்ணாம்பட்டிலும், வேலூர் மாநகராட்சியில் 24.07.2026 அன்று அரசினர் முஸ்லீம் மேல்நிலை பள்ளி, அண்ணா சாலை ரவுண்டனா வேலூரிலும்,  குடியாத்தம் நகராட்சியில் 24.07.2026 அன்று ஏபிஎம் மகால் திருமலை நகர், குடியாத்ததிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இம்முகாமில் அனைத்து துறை அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்கள் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் தாட்கோ பொது மேலாளர் அமுதாராஜ், மாநகர நல அலுவலர் மரு.பிரதாப்குமார், அரசு துறை சார்ந்த மாவட்ட அலுவலர்கள், வேலூர் மாவட்ட தனியார் வணிக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.