• அரசு வேலூர் மருத்துவ கல்லூரி சான்றிதழ் வழங்கும் விழா.
· அரசு வேலூர் மருத்துவ கல்லூரியில் 16-வது இளநிலை மருத்துவ பட்ட படிப்பு சான்றிதழ் வழங்கும் விழா.
· வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் 100 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறையில் உள்ள அரசு வேலூர் மருத்துவ கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற 16-வது இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கும் விழாவில், மாவட்டஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், இளநிலை மருத்துவ பட்ட படிப்பினை முடித்த 100 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது.
உங்களுடைய சவால்கள் இன்றிலிருந்து தொடங்குகிறது. இவ்வளவு நாள் நீங்கள் கற்ற கல்வி, எடுத்த முயற்சிகளின் பலன்தான் இன்று நீங்கள் அனைவரும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளீர்கள்.
இதனுடைய முடிவு இனி நீங்கள் செய்யவுள்ள மருத்துவ சேவையில்தான் தொடங்குகிறது.. இனி நீங்கள் ஒவ்வொரு நாளும் வெள்ளை கோட் அணியும்போது சமூகம் உங்கள் மீது பல பொறுப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்று நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
எனவே, உங்கள் அனைவருக்கும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் மிகச் சிறந்த மருத்துவர்கள். கருணை உள்ளவர்களாக இருங்கள். இதில் எந்தவித சமரசமும் இருக்கக்கூடாது, இத்தனை ஆண்டுகளாக நீங்கள் அனைவரும் மிகுந்த அறிவை வளர்த்து கொண்டிருக்கிறீர்கள்."
'ஒரு நல்ல மருத்துவர் நோய்க்கு சிகிச்சை அளிக்கிறார், ஒரு சிறந்த மருத்துவர் நோய் உள்ள நோயாளிக்கு சிகிச்சை அளிக்கிறார் என்று நான் படித்திருக்கிறேன். எனவே, உங்கள் ஒவ்வொருவரும் ஒரு நல்ல மருத்துவராக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த மருத்துவராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." "ஆகவே, நீங்கள் இந்தக் கல்லூரியிலிருந்து வெளியே செல்லும்போது, உங்களிடம் வரும் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட அக்கறையுடன் நடத்த வேண்டும் என்பதை உங்கள் இதயத்தில் நினைவில் கொள்ளுங்கள். அது உங்களோட முதன்மையான பொறுப்பாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய என்னுடைய நல்வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலழகன் (அணைக்கட்டு), மரு.ம.சுதாகர் (காட்பாடி), ஏ.தென்றல்குமார் (கீ.வ.குப்பம்), க.சிந்து (குடியாத்தம்), எஸ்.எம்.சுகுமார் (ஆற்காடு), அரசு வேலூர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மரு.எம்.ரோகிணி தேவி, துணை முதல்வர் மரு.கௌரி வெலிகண்டலா, மருத்துவ கண்காணிப்பாளர் மரு.ந.ரதிதிலகம், குடியிருப்பு மருத்துவர் மரு.துரை.ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Comments
Post a Comment