• வேலூர் வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
· வேலூர் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தொரப்பாடி ஏரி, வேளாண்மை துறையின் சார்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம், மணிலா விதை பண்ணை திட்டம் போன்ற திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வேலூர் தொரப்பாடி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தொரப்பாடி ஏரியின் வலது கழிங்கின் வழிந்தோடி உபரி நீர் செல்லும் பகுதிகளில் உள்ள வீடுகள், சாலைகளில் வெள்ளம் செல்வதை தவிர்க்கும் பொருட்டு கால்வாயில் தண்ணீர் செல்லும் பாதையில் தேவையான இடங்களில் வெள்ளப் பாதுகாப்பு சுவரை கட்டுவதன் மூலமும், குடியிருப்பு பகுதியின் இடையே செல்லும் கால்வாயினை மூடி செல்லும் வகையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் தேவையான மதிப்பீடு தயார் செய்ய தள ஆய்வுகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், அடுக்கம்பாறை கிராமத்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் 2026-27ன்கீழ் பயனாளி பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் வழங்கப்பட்ட இடுபொருட்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் விவசாயி நெல் C055 30 கிலோ, நுண்ணூட்ட கலவை 5 கிலோ, அசோஸ்பைரில்லம் 500 மிலி வழங்கப்பட்டதாகவும், தாம் இயற்கை முறையில் விவசாயத்தை மேற்கொண்டு வருவதாகவும், எவ்வித பூச்சித் தாக்குதல் இன்றி அதிக மகசூல் பெற்று வருதாகவும் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், சாத்துமதுரை கிராமத்தில் பயனாளி பயரிடப்பட்டுள்ள மணிலா விதைப்பண்ணை வயலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், கம்மவான்பேட்டை ஊராட்சியை சார்ந்த மகளிர் சுய உதவி குழுவினர்கள் இடையே கலந்துரையாடினார். மேலும் மகளிர் சுய உதவி குழுவிற்கு வங்கி கடன் இணைப்பு 7 குழுக்களுக்கு ரூ.1,10,75,000/- தொகையும், சமுதாய முதலீட்டு நிதி 2 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2,00,000/- தொகையும், நலிவுற்றோர் குறைப்பு நிதி (நலிவுற்றோர் மற்றும் மாற்று திறனாளி) 2 நபர்களுக்கு ரூ.30,000/- தொகையும் மற்றும் வட்டார வணிக வள மையத்தின் மூலம் தொழிலை மேற்கொள்ள 2 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,00,000/- தொகையும் என மொத்தம் 13 பயனாளிகளுக்கு ரூ.1,14,05,000/- மதிப்பில் நலதிட்ட உதவிகளை வழங்கினார்
இந்த ஆய்வின்போது வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மு.ம.வினோத்கண்ணன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் வெங்கடேஷ், மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், மகளிர் திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தேன்மொழி, வேளாண்மை உதவி இயக்குநர் இலட்சுமணன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பாலாஜி, மாநகர நல அலுவலர் மரு.பிரதாப்குமார், 49வது வார்டு மாமன்ற உறுப்பினர் லோகநாதன், கம்மவான்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகன், வேலூர் வட்டாட்சியர் பழனி, கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி உட்பட பலர் உடனிருந்தனர்.


Comments
Post a Comment