• மூலைகேட் அரசு ஆரம்ப பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா.
· மூலைகேட் அரசு ஆரம்ப பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மூலைகேட் அரசு ஆரம்ப பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப்அன்னையா தலைமை தாங்கினார். வல்லண்டராமம் ஊராட்சி மன்ற தலைவர் மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆசிரியை ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார்.
கல்வி வளர்ச்சி நாளையொட்டி தமிழ் ஆங்கில பேச்சு திறன் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் திறன் போட்டி, பாடும் திறன் போட்டி, வண்ணம் தீட்டும் திறன் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் காமராஜரை பற்றி பள்ளி மாணவர்கள் கோஷின், மித்ரன், தாட்சாயினி, மகிழ்வதனி, செல்வி ஆகியோர் ஆங்கிலம் மற்றும் தமிழில் சிறப்பாக உரையாற்றினர். முடிவில் ஆசிரியை மரியபுனிதா நன்றி கூறினார்.

Comments
Post a Comment