• வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் சிறார் கல்வி உதவி தொகை.
· வேலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி தொகை பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
பாரத பிரதமரின் கல்வி உதவி தொகை (PMSS ) / ரக்சா மந்தரியின் முன்னாள் படைவீரர் நல நிதியின் கல்வி உதவி தொகை ( RMEWF) பெற தகுதி இல்லாத மற்றும் நிராகரிக்கப்பட்ட வேலூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் கல்வி உதவி தொகை (ECLIG) 2026-27 பெறுவதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 30-ம் தேதி வரை இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகிறது. மேலும் முன்னாள் படைவீரர் மற்றும் கைம்பெண்கள் அவர்களது சிறார்களுக்கு தொகுப்பு நிதி கல்வி உதவி தொகை கோரும் நேர்வில் 01 முதல் 12-ம் வகுப்பு வரை நடப்பு ஆண்டிலும் (Current Year) ஏனைய படிப்புகளுக்கு நடந்து முடிந்த கல்வி ஆண்டிற்கும் விண்ணப்பித்து பயனடையுமாறும், மேலும் விவரங்களுக்கு வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகுமாறும் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment