• வேலூர் மாணவர்களுக்கு வங்கி கல்வி கடன் மேளா.

·        வேலூர் மாவட்டத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த மாணவர்கள் 100% உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்யும் பொருட்டு தொழில் / மருத்துவம் / துணை மருத்துவ படிப்புகள் ஆகிய கல்லூரி கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு தடையின்றி கல்வி பயில்வதற்கு ஏதுவாக வங்கி கடன் மேளா கீழ் கண்ட அட்டவணையின் படி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார் .

வேலூர் மாவட்டத்தில் 2025-2026-ம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த மாணவர்கள் 100% உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்யும் பொருட்டு தொழில் / மருத்துவம் / துணை மருத்துவ படிப்புகள் ஆகிய கல்லூரி கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு தடையின்றி கல்வி பயில்வதற்கு ஏதுவாக வங்கி கடன் மேளா நடத்த மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டத்தில் 3 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

 

வ. எண்.

நாள்

இடம்

நேரம்

கலந்து கொள்ள வேண்டிய மாணவர்கள்

1

17.07.2026

அரசு முஸ்லீம் மேல்நிலை பள்ளி, வேலூர்

காலை 10.00 மணிமுதல்

வேலூர் நகர் / புறநகர், காட்பாடி வட்டாரம்

2

21.07.2026

அரசு நகராட்சி மேல்நிலை பள்ளி, குடியாத்தம்

குடியாத்தம், பேர்ணாம்பட்டு மற்றும் கீ.வ.குப்பம் வட்டாரம்

3

22.07.2026

அரசு மேல்நிலை பள்ளி, கணியம்பாடி

அணைக்கட்டு மற்றும் கணியம்பாடிவட்டாரம்

மேற்காணும் அட்டவணையின்படி நடைபெறும் முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கீழ்கண்ட விவரங்களை

1.                 ஆதார்அட்டை

2.             PAN Card                                             மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் விவரம்

3.             வங்கிக் கணக்கு புத்தகம்

4.             கல்லூரி சேர்க்கை சான்றிதழ் (Bonafide Certificate)

5.             கல்லூரி கட்டண செலவு அட்டவணை (Fees Structure)

6.             புகைப்படம் – 4 (Passport Size Photo)

7.              குடும்ப வருமான சான்றிதழ்

8.             சாதி சான்றிதழ்

9.             அனைத்து மதிப்பெண் சான்றிதழ்கள்

10.        கலந்தாய்வுக்கான கடிதம்

ஆகிய அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு முகாமிலேயே விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு மாவட்ட கட்டுபாட்டு அறை எண் 9788859190 / 1077 தொடர்பு கொள்ளவும். எனவே, மாணவ , மாணவியர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார் .

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.