• அரசு சமூக நீதி விடுதி மாணாக்கர்களுக்கு வரவேற்பு தொகுப்பு.

·        வேலூர் மாவட்டத்தில் 2026-2027-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நல துறையின்கீழ் செயல்படும் 20 அரசு சமூக நீதி விடுதிகளில் சேர்க்கை பெறும் 396 புதிய மாணாக்கர்களுக்கு தலா ரூ.1952/- வீதம் ரூ.7,72,992/- மதிப்பிலான வரவேற்பு தொகுப்பு - மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.

வேலூர் மாவட்டத்தில் 2026-2027-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நல துறையின் கீழ் செயல்படும் 20 அரசு சமூக நீதி விடுதிகளில் சேர்க்கை பெறும் 396 புதிய மாணாக்கர்களுக்கு தலா ரூ.1952/- வீதம் ரூ.7,72,992/- மதிப்பிலான வரவேற்பு தொகுப்பினை மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  வழங்கினார்.

இந்த வரவேற்பு தொகுப்பில்  பாயுடன்கூடிய மெத்தை, போர்வை, தலையணை, இரண்டு தலையணை உறைகள் ஆகிய உறக்கத்திற்கான உபகரணங்களும், எவர்சில்வர் தட்டு, விளிம்புடன்கூடிய எவர் சில்வர் டம்பளர் ஆகிய உணவருந்தும் உபகரணங்கள், பிளாஸ்டிக் வாளி, பிளாஸ்டிக் குவளை ஆகிய குளியலறை உபகரணங்கள் உள்ளடங்கியுள்ளன.

இந்நிகழ்வின்போது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை அலுவலர் த.ராஜராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வெ.சரவணன் மற்றும் விடுதி காப்பாளர்கள் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.