பொது விநியோக திட்ட சிறப்பு குறை தீர்வு முகாம்.
· வேலூர் மாவட்டத்தில் 11.07.2026 இரண்டாவது சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோக திட்ட சிறப்பு குறை தீர்வு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் கீழே குறிப்பிட்டுள்ள கிராமங்களில் 11/07/2026 ஆம் தேதி (இரண்டாவது சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு செய்தல், குடும்பத் தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் வட்ட வழங்கல் அலுவலர்களால் மேற்கொள்ளப்படும். மேலும் பொது விநியோக திட்ட பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதனையும் இம்முகாமில் அலுவலர்களிடம் தெரிவித்து தீர்வு காணலாம்.
சிறப்பு குறைதீர்வு முகாம்கள் நடைபெறும் இடங்கள்:
|
வ. எண் |
வட்டம் |
உள்வட்டம் |
கிராமம் |
|
1. |
அணைக்கட்டு |
ஊசூர் |
புலிமேடு |
|
2. |
குடியாத்தம் |
குடியாத்தம் கிழக்கு |
வேப்பூர் |
|
3. |
கீ.வ.குப்பம் |
வடுகந்தாங்கல் |
லத்தேரி |
|
4. |
காட்பாடி |
மேல்பாடி |
சின்ன கீசகுப்பம் |
|
5. |
பேர்ணாம்பட்டு |
மேல்பட்டி |
சொக்கரிஷி குப்பம் |
|
6. |
வேலூர் |
பென்னாத்தூர் |
மேட்டு இடையம்பட்டி |
எனவே, பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட கிராமங்களில் நடைபெறும் சிறப்பு குறை தீர்வு முகாமில் மனுதாரர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆவணங்களின் நகலுடன் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment