• குடியாத்தம் விவசாயி ஆட்சியரிடம் மனு.
· குடியாத்தம் அருகே 120 ஆண்டு காலமாக அனுபவத்தில் உள்ள விவசாய நிலத்தை திடீரென வஃக்பு போர்டு இடம் என கூறி மரங்களை வெட்டி ஆக்கிரமிப்பு - விவசாயி ஆட்சியரிடம் மனு.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் வசிப்பவர் பரந்தாமன் விவசாயி. இவர் மாவட்ட ஆட்சி தலைவர் லீலாஅலெக்சிடம் நேரில் மனு அளித்துள்ளார்.
அதில் குடியாத்தம், மேலாலத்தூர் சாலையில் ஜோகிமடம் என்ற இடத்தில் 710 /2 ஏ, 710/1 ஆகிய சர்வே நிலங்கள் சுமார் 4 தலைமுறைக்கு மேலாக நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம்.
இந்நிலையில் நிலத்தை அளவீடு செய்யாமல் என் அனுபவத்தில் உள்ள இடங்களை வஃக்பு போர்டுக்கு சொந்தமானது என கூறி என்னிடமிருந்த விவசாய நிலத்தை தற்போது ஆக்கிரமிப்பு செய்து வருகிறார்கள். என்னையும் சிறை வைத்து அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். எனவே எனது நிலத்தை மீட்டுத்தர தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Comments
Post a Comment