• வேலூரில் இலவச கண் மருத்துவ முகாம்.
· வேலூரில் இலவச கண் மருத்துவ முகாம் - 100 பேர் பங்கு பெற்றனர்.
வேலூரில், வேலூர் கட்டிட பொறியாளர்கள் சங்கம் மற்றும் வாசன் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் மருத்துவ முகாமை மருத்துவமனை வளாகத்தில் நடத்தியது.
முகாமிற்கு வாசன் கண் மருத்துவமனை குழுமத்தின் பொது மேலாளர் செல்வம் தலைமை தாங்கினார். வேலூர் கட்டிட பொறியாளர் சங்க தலைவர் வி.எஸ்.அர்ஜுனன் முன்னிலை வகித்தார். வாசன் கண் மருத்துவமனை வேலூர் மேலாளர் விஜயகுமார் வரவேற்றார்.
முகாமில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பொறியியல் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் சு.பாஸ்கரன் கலந்து கொண்டு பேசினார்.
முகாமில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். கண் பரிசோதனை செய்ய வந்தவர்களை மூத்த கண் டாக்டர்கள் சர்வேஸ்வரன், ஸ்ரீஷா மற்றும் டாக்டர்கள் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.
முகாமில் கட்டிட பொறியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment