• விபத்தில் மூளை சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்.
· விபத்தில் மூளை சாவடைந்த ஆந்திர மாநில இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்.
ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே உள்ள சந்திரகிரியை சேர்ந்த 22 வயதான கோதாபட்டி ஹேம்நாத்ரெட்டி ஒரு பட்டதாரி. மருந்தகத்தில் பணிபுரிந்து வருகிறார். ஜூலை 8-ஆம் தேதி திருப்பதி அருகே இரு சக்கர வாகன விபத்தில் சிக்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பூட்டுத்தாக்கு சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹேம்நாத்ரெட்டி ஜூலை 9-ம் தேதி அவர் மூளைசாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் உறுப்பு தானம் செய்ய முன் வந்தனர்.
இதயம் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் ராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனைக்கும், கண்கள் வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. அவரது தந்தை தனபிரகாஷ்ரெட்டி ஒரு விவசாயி, தாய் முனிலட்சுமி ஒரு இல்லத்தரசி. அவருக்கு ஒரு தங்கை உள்ளார். அவர் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

Comments
Post a Comment